உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
2025 ராசி பலன்: ஆரோக்கியத்தில் பாதிப்பை சந்திக்கப்போகும் 3 ராசியினர்… உங்க ராசி இருந்தா ஜாக்கிரதை

புதிய ஆண்டு ஆரம்பமாகின்றது என்றால் அனைவருமே புதிய முயற்சிகளை செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலும் வாழ்க்கையை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆசையிலும் இருப்பார்கள்.
இந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான ஜோதிட கணிப்புகளளின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசியினர் வருகின்ற ஆண்டில் உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும் என்று ஜோதிட நிபுணர்கள் கணித்துள்ளனர்.
அதன் பிரகாரம் ஆரோக்கியத்தில் பாதிப்பபை சந்திக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டு ஆரம்பித்து ஏப்ரல் மாதம் வரையில் மேஷ ராசியில் பிறந்தவர்கள் உடல் ரீதியில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிடும்.
இவர்கள் கால் சம்பந்தப்பட்ட நோய்களை சந்திக்க கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது. இருப்பினும் ஏப்ரல் மாததட்தின் பின்னர் படிப்படியாக ஆரோக்கியம் சீராகும்.
ஆண்டின் ஆரம்ப பகுதியில் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் முயற்சிகளில் கூடய கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
ரிஷப ராசியில் பிறந்தவர்களும் 2025 ஏப்ரல் மாதம் வரையில் உணவுப்பழக்கவழக்கம் மற்றும் உடற்பயிற்சி தொடர்பில் அதிக அக்கறையுடன் செயற்பட வேண்டும்.
இந்த காலப்பகுதியில் ரிஷப ராசியினரின் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் பலவீனமடைந்திருக்கும் என்பதால் அடிக்கடி நோய்கள் ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது.
இவர்கள் தங்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உறுதியாக வைத்துக்கொள்ள வேண்டும்.நோய்கள் ஏற்பட்டாலும் மனதளவில் வலுவாக இருந்தால் இவர்கள் விரைவில் குணமடைவார்கள்.
மிதுன ராசியினருக்கு ஏப்ரல் மாதத்திற்குப் பின்னரான காப்பகுதியில் வியாழன் மற்றும் சனியின் பெயர்ச்சி காரணமாக ஆரோக்கியம் பாதிப்படையும்.
அவர்களின் ராசியில் வியாழன் இருப்பதால் உடல் பருமன் சம்பந்தப்பட்ட உபாதைகளால் அவதிப்பட வேண்டிய நிலை உருவாகும்.
பருத்த உடல் காரணடமாக தன்னம்பிக்கை இழக்கும் வகையிலான சிந்தனைகள் அதிகரிக்கும். எந்த வேலையிலும் நாட்டம் இருக்காது. இவர்கள் மனதளவில் உறுதியான இருக்க வேண்டியது அவசியம்.