உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
க்ளீன் சிறீலங்கா என்ற பெயரில் மக்களை துன்பத்தில் ஆழ்த்திய அநுர!

க்ளீன் சிறீலங்கா (Clean Sri Lanka) என்ற பெயரில் மக்களை துன்பத்தில் ஆழ்த்தும் வகையில் அரசாங்கம் செயற்படுவதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன் (V S Radhakrishnan) தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (08) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர், க்ளீன் சிறீலங்காவின் பேருந்து மற்றும் முச்சக்கரவண்டிகள் மீதான கட்டுபாடுகளால் சிறிய வர்த்தக வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த வர்த்தகர்களுக்கு கிடைக்கின்ற வாய்ப்புக்களை இல்லாது செய்து விட வேண்டாம் எனவும் அவர் அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.