உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
இந்திரஜா- கார்த்திக் தம்பதிகளுக்கு குழந்தை பிறந்தாச்சு- மகிழ்ச்சியில் குடும்பத்தினர்

இந்திரஜா- கார்த்திக் தம்பதிகளுக்கு குழந்தை பிறந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படத்துடன் செய்தி வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபலமாக உள்ள வாரிசு நடிகைகளில் ஒருவர் இந்திரஜா சங்கர்.
இவர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரின் உணர்ச்சிகரமான நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்.
இதனை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்திலும் இந்திரஜாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதற்கு பின்னர் சினிமாவில் வலம் வருவார் என எதிர்பார்த்த வேளையில், அவருடைய மாமா- கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.
இந்த நிலையில், தற்போது இந்திரஜாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளனர்.
இந்த ஜோடிக்குச் சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் பலர் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.