உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
ராட்டினத்தில் விளையாடிக்கொண்டிருந்த இருவருக்கு நேர்ந்த கதி

தெஹியோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற திருவிழாவில் இராட்டினத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் உட்பட இருவர் கீழே வீழ்ந்து காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இராட்டினத்தின் இருக்கை ஒன்று உடைந்து வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 51 வயதுடைய நபரும் 11 வயதுடைய சிறுவனுமே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த இருவரும் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.