உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
சட்டவிரோத கடற்றொழிலை இந்தியா தடுக்க வேண்டும்! அநுர தரப்பு கோரிக்கை

வடக்கில் உள்ள இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும், தங்கள் நாட்டவர் மீது, இந்திய மத்திய அரசும், தமிழக அரசும் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவைத் தலைவர் பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
இலங்கையில் உள்ள வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு, இந்தியா வழங்க வேண்டிய சிறந்த உதவி, அதன் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதும், வடக்கில் உள்ள இலங்கையர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும், தமது கடற்றொழிலாளர்களை தடுப்பதுமாகும் என்று, ரத்நாயக்க கூறியுள்ளார்.
இந்தியாவின் உண்மையான தன்மையை, தமது நாட்டு கடற்றொழிலாளர்கள், இலங்கை கடல் எல்லைக்குள் ஊடுருவுவதைத் தடுப்பதன் மூலம் மட்டுமே வெளிப்படுத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையின் தெற்கில் உள்ள கடற்றொழிலாளர்களுடன் ஒப்பிடும்போது வடக்கின் கடற்றொழிலாளர்கள் ஏழைகள் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அவைத் தலைவரின் உரையை அடுத்து, தமது கருத்த்தை வெளியிட்ட, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கைக்கு வருகை தரும் போது, இலங்கை அரசு இந்த விடயத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும், இந்திய கடற்றொழிலாலர்களால், இலங்கையின் வடக்கு கடற்றொழிலாளர்கள் உதவியற்றவர்களாக உள்ளனர். இது ஒரு கட்டத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்று மனோ கணேசன் கூறியுள்ளார்.