உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து ; நான்கு பேர் பலி

குருநாகல் வெஹர பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் நேற்று (07) இரவு 11 மணியளவில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில், நிரப்பு நிலைய முகாமையாளரை உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நான்கு பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
6,000 லீற்றர் கொள்ளளவு கொண்ட இரண்டு வாயு தொட்டிகளில் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு தீ விபத்திற்கு காரணமாகியுள்ளது.அந்த நேரத்தில் ஒரு லொறிக்கு வாயு நிரப்பும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது.
குருநாகல் மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்படுத்தினர்.வெடிக்காத மற்றொரு வாயு தொட்டி பாதுகாப்பாக மூடப்பட்டு பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாக குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.