உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
உலக பாரம்பரிய பட்டியலில் நினைவுச்சின்னமாக பதிவாகியுள்ள இலங்கை பற்றிய முக்கிய ஆவணங்கள்

இலங்கையின் மும்மொழி கல்வெட்டு மற்றும் 1873 ஆம் ஆண்டு பாணந்துறைப் போர் தொடர்பான ஆவணங்களின் தொகுப்பு, யுனெஸ்கோவின் உலக நினைவக (Memory of the World) பட்டியலில் நினைவுச்சின்னமாக சேர்க்கப்பட்டுள்ளது என ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு அறிவித்துள்ளது.
இச்சேர்க்கை, சீனாவும் இலங்கையும் இணைந்து யுனெஸ்கோவிடம் பரிந்துரை செய்த பின்னர் உருவாகியுள்ளது. மும்மொழி சிலா கல்வெட்டு என்பது சீன, பாரசீக மற்றும் தமிழ் மொழிகளில் செதுக்கிய கல்வெட்டு பலகை ஆகும்.
1911 ஆம் ஆண்டு ஒரு பிரிட்டிஷ் பொறியாளரால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கல்வெட்டு தற்போது கொழும்பில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. மேலும், அதன் நகல் காலி அருங்காட்சியகத்திலும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த கல்வெட்டு, ஒரு புனித மலை ஆலயத்திற்கு வழங்கப்பட்ட காணிக்கைகளைப் பற்றியும், மூன்று வெவ்வேறு மொழிகளிலும் இடம்பெற்றுள்ளதாலும், அதன் வரலாற்று, கலாச்சார மற்றும் மொழியியல் முக்கியத்துவத்தினால் உலக நினைவகப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
அதேபோல், பாணந்துறை ரன் கோத் விஹாரையில் வைக்கப்பட்டுள்ள 1873 ஆம் ஆண்டு பாணந்துறைப் போர் மற்றும் அதனுடன் தொடர்புடைய நான்கு ஆவணங்களும் நினைவுச்சின்னமாக இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. அவை வரலாற்று, ஆன்மீக மற்றும் கலாச்சார முக்கியத்துவம் கொண்டவை என யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
சமீபத்திய சேர்க்கைகளுடன், உலக நினைவக பட்டியலில் இப்போது 570 புதிய பதிவுகள் உள்ளன. மேலும், 100க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உலக நினைவகக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.