உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
24 மணிநேர விசேட பேருந்து சேவை முன்னெடுப்பு

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு பயணித்த பலர், தற்போது மீண்டும் தலைநகர் மற்றும் பிற நகரங்களுக்கு திரும்பி வருவதற்காக முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை முன்னிட்டு, இலங்கை போக்குவரத்து சபை 24 மணிநேர விசேட பேருந்து சேவையை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சபையின் முகாமையாளர் கூறுகையில், 24 மணிநேர விசேட சேவை தொடர்ந்து இடம்பெறும். கண்டி – தலதா மாளிகை புனித தந்தத்தாது கண்காட்சி பார்வையிடுவோருக்காகவும் விசேட பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்டி – கொழும்பு வீதியில் சுமார் 150 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மேலும், கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று வரை, 1,300 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளதாகவும் போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.