உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
தமிழர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் பலி

அம்பேபுஸ்ஸ – திருகோணமலை வீதியில் பெலிகமுவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில், ஒரு பெண் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.
கலேவெலயிலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற உந்துருளி, மோசமான முறையில் விபத்துக்குள்ளானது.
விபத்தில் 31 வயதுடைய ஆண் , 21 வயதுடைய பெண் இருவருமே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், உந்துருளியில் இருந்த சிறு குழந்தை ஒருவர் காயமடைந்துள்ளார். அவர் தற்போது தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.