உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
யாழில் இணையக் குற்ற விசாரணைப் பிரிவு திறப்பு

வட மாகாணத்தில் இணையக் குற்றங்கள் அதிகரித்து வருவதால், யாழ்ப்பாணத்தில் புதிய இணையக் குற்ற விசாரணைப் பிரிவு 25.04.2025 அன்று பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவால் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இதனால், இணையக் குற்றங்களுக்கு எதிராக முறைப்பாடுகளை முன்வைப்பதற்காக இனி பொதுமக்கள் கொழும்புக்குச் செல்ல வேண்டிய அவசியமின்றி, நேரடியாக யாழ்ப்பாணத்தில் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
இந்த நடவடிக்கை, சமூகத்தில் இணையப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ளது.