உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
சில சட்டங்களை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் கீழ் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கும், தற்போது நிலவும் சில முக்கிய சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இது குறித்து அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவுமாகியவர் தனது கருத்துக்களை வெளியிட்டார்.
அதன்படி, பெருந்தோட்ட முகாமைத்துவ சட்டம் எனும் புதிய சட்டமொன்று வரையறுக்கப்படவுள்ளது. துருசவிய நிதியத்தின் நிர்வாக அதிகாரங்கள், எதிர்காலத்தில் இறப்பர் அபிவிருத்தி திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் வகையில் புதிய சட்டம் உருவாக்கப்படும்.
மேலும், கீழ்க்கண்ட ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. தேயிலை, இறப்பர் மற்றும் தென்னந்தோட்டங்கள் கட்டுப்பாட்டு சட்டம்,தொண்டமான் ஞாபகார்த்த மன்ற சட்டம்,தேயிலைச் சக்தி நிதியச் சட்டம்
இந்த முன்னெடுப்புகள், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் சமூகங்களின் நலன்களை மேம்படுத்தும் நோக்கில் நவீன சட்டரீதியான மாற்றங்களை ஏற்படுத்துவதாக அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.