உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
தென்னிலங்கையில் வெளிநாட்டு நாணயத்துடன் தமிழ் பெண் கைது

கொழும்பில் வசிக்கும் தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்த 23 வயது இளம் பெண் ஒருவர், அந்த வீட்டில் இருந்த மதிப்புமிக்க பொருட்கள் மற்றும் வெளிநாட்டு நாணயங்களை திருடியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண், மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்தவளாவார். திருடப்பட்ட பொருட்கள் 2 மதிப்புமிக்க கைக்கடிகாரங்கள் (மொத்த பெறுமதி: ரூ. 1 கோடி 34 லட்சத்து 50 ஆயிரம்) 500 ஸ்டெர்லிங் பவுண்ட்
பெண் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி விடுப்புக்குச் சென்ற பின்னர் மீண்டும் வேலைக்கு திரும்பவில்லை. தொடர்ந்த தொலைபேசி அழைப்புகளுக்கும் பதில் அளிக்கவில்லை என்பதனால், தொழிலதிபர் சந்தேகித்து குருந்துவத்தை பொலிஸில் முறைப்பாடு செய்தார்.
மேற்கொண்ட விசாரணையின் பேரில் பெண் கைது செய்யப்பட்டு, கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி அவர்களால் 2025 மே 5 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.