உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்த மூவரடங்கிய குழு நியமனம்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பயிலும் 23 வயதான மாணவர் ஒருவர், மன அழுத்தம் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக மூவரடங்கிய விசாரணை குழு ஒன்று பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஏ.ஏ.வை அமரசிங்க தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளது.
மாணவர் புஸ்ஸல்லாவை பகுதியைச் சேர்ந்தவர். சிரேஷ்ட மாணவர்களின் பகிடிவதை (ragging) காரணமாகவே மாணவன் மன அழுத்தத்திற்கு உள்ளானதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. இதுவரை 16 மாணவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.மேலும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினாலும் தனி விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சம்பவங்கள், இலங்கை உயர்கல்வி நிலையங்களில் தொடரும் பகிடிவதைச் சந்திக்கும் புதிய மாணவர்களின் சிரமங்களை வெளிக்கொணர்கின்றன. இது தொடர்பான நடவடிக்கைகள் சட்டரீதியாகவும், நடத்தை ரீதியாகவும், பல்கலைக்கழகங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதாய் அமைந்துள்ளது.