உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
யாழில் நேர்ந்த கொடூரம் ; பெற்ற பிள்ளைக்கு நஞ்சு கலந்து கொடுத்த தந்தை

இளவாலை பொலிஸ் பிரிவு உள்ள உயரப்புலம் பகுதியில், ஒரு தந்தை தனது 6 வயதான பிள்ளைக்கு கிருமிநாசினி கலந்த உணவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறு பிள்ளை உணவு உட்கொண்ட பிறகு, வாயிலிருந்து நுரை வெளியேறியது. உடனே குடும்பத்தினர் குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர், அங்கு அது கிருமிநாசினி கலந்த உணவு காரணமாக பாதிக்கப்பட்டது என்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பிள்ளையின் தந்தை வீட்டில் இருந்து தலைமறைவாகியுள்ளார். அவரை கைது செய்ய இளவாலை பொலிஸ் விசாரணைகளைத் தொடங்கியுள்ளன.
மனநல காரணங்கள் சம்பவத்தில் பங்கு வகித்துள்ளதா என்பதை பற்றி பொலிசார் ஆராய்ந்து வருகின்றனர்.