உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
யாழில் பண மோசடியில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

வெளிநாட்டு வேலை வாய்ப்பின் பேரில் பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் யாழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர், மல்லாகம் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் குறித்த அதிகாரி, 2022ஆம் ஆண்டு, தனது சக பொலிஸ் அதிகாரியை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி ரூ.14,70,000 பெறுதலில் ஈடுபட்டுள்ளார். ஆனால் மூன்று வருடங்களாக அந்த உறுதியை நிறைவேற்றாத நிலையில், பாதிக்கப்பட்ட அதிகாரி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் அடிப்படையில், பண மோசடி குற்றச்சாட்டில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், குறித்த உத்தியோகஸ்தரை கைது செய்து, மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.
இதனையடுத்து, நீதிமன்றம் அவர் மீது மே 22ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த சம்பவம், பொலிஸ் அதிகாரிகளின் மீது வைத்த நம்பிக்கையை சீர்குலைக்கும் செயல் என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும், சர்வதேச வேலை வாய்ப்புகள் என்ற பெயரில் துன்புறுத்தப்படும் பலரும் இதுபோன்ற ஊழல்களை வெளிக்கொணர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.