உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
கடலுக்கு நீராட சென்ற நான்கு தமிழ் இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி

புத்தளம் மாவட்டம், வென்னப்புவ கடலில் மூழ்கி நால்வர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
மேற்படி நால்வரும் குளித்துக் கொண்டிருந்த அலையில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என்று வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா மாவட்டம், பொகவந்தலாவைப் பகுதியில் இருந்து வென்னப்புவ பகுதி கடலுக்கு நீராடச் சென்றவர்களே இந்த அனர்த்தத்தில் சிக்குண்டு உயிரிழந்துள்ளனர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்றும், ஏனைய மூவரின் சடலங்களைத் தேடும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.