உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
வெருகல் பிரதேச சபையில் பெண் உறுப்பினர்களை நியமிக்குமாறு கோரிக்கை

திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச சபையில் மேலதிக நியமனப் பத்திரத்தின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட வேண்டிய உறுப்பினர்களை நியமிக்குவதற்காக, சம்பந்தப்பட்ட கட்சிகளின் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு தலைவரால் அதிகாரப்பூர்வ கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய இரு அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கே இந்த அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டுள்ளன. தேர்தல் சட்டப்படி, மேலதிக நியமனப் பதவிகளில் 2 இற்கும் மேற்பட்ட இடங்களை பெறும் கட்சிகள், குறைந்தபட்சம் ஒருவராவது பெண் உறுப்பினராக நியமிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய, இலங்கைத் தமிழரசுக் கட்சி – மேலதிக நியமனப் பத்திரத்தின் கீழ் பெற்ற 2 இடங்களுக்கும் பெண் உறுப்பினர்களை நியமிக்க, தேசிய மக்கள் சக்தி – பெற்ற 2 இடங்களில் குறைந்தது 1 இடத்திற்கு பெண் உறுப்பினரை நியமிக்க,தேர்தல் ஆணைக்குழு தலைவரின் வழியாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, உள்ளூராட்சி நிர்வாகத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது, பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் முக்கியமான முன்னேற்றமாகவும் கருதப்படுகிறது.