உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
மின் கட்டண அதிகரிக்கப்பு தொடர்பில் முன்னாள் எம்.பி வெளியிட்ட அறிவிப்பு

மின்சார கட்டணத்தை 25% முதல் 30% வரையிலான அளவிற்கு அதிகரிக்க அநுர அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இன்று (15) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், “2024 ஆம் ஆண்டின் இறுதியில் இலாபத்தில் இருந்த மின்சார சபை, வெறும் ஏழு மாதங்களில் எப்படி நஷ்டத்தைச் சந்தித்தது?” எனக் கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக அரசாங்கம் தெளிவான விளக்கம் வழங்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், “மின்சார சபையை அகற்றி தனியார்மயமாக்கும் நடவடிக்கை அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் உள்ளன. இது மக்களின் அன்றாட வாழ்க்கையையும், தொழில்துறையின் இயங்கும் நிலைமையையும் பெரும் நெருக்கடிக்குத் தள்ளும்” என்றும் விமல் வீரவன்ச சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தின் இந்த முடிவு எதிர்காலத்தில் மின் கட்டணத்தில் மேலும் அதிகரிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என்றும், இது மக்களுக்கு பேரழுத்தமாகும் என அவர் தெரிவித்தார்.