உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
அழிவை நெருங்கியுள்ள பூமி ; ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்

பூமியின் உயிர்வாழ்தன்மை எதிர்காலத்தில் துடிதுடிக்கும் நிலையில் மாறக்கூடும் என ஜப்பானைச் சேர்ந்த டோஹோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாசாவின் கிரக மாடல்களை அடிப்படையாகக் கொண்டு, சூப்பர் கம்ப்யூட்டர்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், பூமியின் ஆக்சிஜன் அளவு சுமார் ஒரு பில்லியன் ஆண்டுகளில் முழுமையாக குறைந்து விடும் என கணிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு (CO₂) அளவு தொடர்ந்து குறையும். இதனால் ஒளிச்சேர்க்கை செயற்பாடு பாதிக்கப்படும் – இதுவே ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் முக்கியமான இயற்கை செயல்முறை. கார்பனேட்-சிலிகேட் சுழற்சி மற்றும் சூரியனின் ஒளிச்சுடரின் தாக்கம் காரணமாக வெப்பநிலை அதிகரிக்க தொடங்கும். இவை அனைத்தும் சேர்ந்து பூமியின் பயோஸ்பியர், அதாவது உயிர் வாழும் இடம், சுமார் 2 பில்லியன் ஆண்டுகளில் அழிந்து விடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
டோஹோ பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் கசுமி ஓசாகி கூறுகையில், “ஆக்சிஜன் குறைபாடு மிக நீண்ட காலத்துக்குப் பிறகு வந்தாலும், அது உயிரினங்களின் தற்போதைய அமைப்பிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அந்த நிலைமை உயிர்வாழ்வதற்கே பாதிப்பானதாக மாறக்கூடும்.”
இது மனிதனின் ஆயுள் வரம்பிற்குப் பெரிதாக இருக்கலாம் என்றாலும், பூமியின் பரிணாம அடிப்படையில் இது மிக முக்கியமான முன்கூட்டிய எச்சரிக்கை என்பதும், மனிதர்கள் தற்போது சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் சீரான முயற்சிகளை மேற்கொள்வது அவசியம் என்பதும், இந்த ஆய்வு மூலம் வலியுறுத்தப்படுகிறது.