உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
குடும்பஸ்தரின் மர்ம மரணத்தால் பரபரப்பு ; சந்தேகத்தில் தீவிரமாகும் விசாரணைகள்

எம்பிலிப்பிட்டிய – ஹல்மில்லகெட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில், சந்தேகத்திற்கிடையான முறையில் ஒருவர் படுக்கையறையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர், துங்கம, எம்பிலிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபர் ஆவார். அவர் தனது மனைவியையும், குழந்தையையும் பிரிந்து, கடந்த 8 வருடங்களாக தனியாகவே வீட்டில் வசித்து வந்தவர்.
நேற்று (15) இரவு, அவரது வீட்டு படுக்கையறையில் சடலம் பழுதடைந்த நிலையில் காணப்பட்டதாகவும், மரணம் சில நாட்களுக்கு முன் நிகழ்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் மரணம் இயற்கையானதா அல்லது கொலையா என்பது தொடர்பில் எம்பிலிப்பிட்டிய பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சடலத்துக்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, மரணத்திற்கான காரணம் தெளிவாக அறியப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக தகவல்கள் விசாரணைகள் மூலம் விரைவில் வெளிவரக்கூடும்.