உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
மர்மான முறையில் வீட்டின் முன் கிடந்த சடலம் ; தீவிர விசாரணையில் பொலிஸார்

பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்மலதென்ன பகுதியில், வீட்டின் முன் உள்ள தாழ்வான பகுதியில், ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக நேற்று (15) இரவு பசறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர், அம்பதென்ன, பசறை பகுதியில் வசிக்கும் 41 வயதுடைய குடும்பஸ்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திலேயே சடலம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது, நீதவான் விசாரணைகள் நடத்தப்படவிருக்கின்றன, இது ஒரு இயற்கை மரணமா, அல்லது கொலைச் சம்பவமா என்பது தொடர்பில் தற்போது உறுதி செய்யப்படவில்லை
பசறை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.அருகிலுள்ள சாட்சியங்கள், அவதானிக்கப்பட்ட பாதுகாப்புக் காட்சிகள் (CCTV) மற்றும் உடல் பிரேத பரிசோதனை முடிவுகள் மூலம் மரணத்துக்கான காரணம் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகும் வரையில், பசறை பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.