உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
இளைஞனின் வாழ்வை பறித்த விசேட அதிரடிப்படையின் வாகனம் ; தமிழர் பகுதியில் சம்பவம்

வவுனியா மாவட்டத்தின் ஓமந்தை பகுதியில் நேற்று மாலை நிகழ்ந்த சோகமான சம்பவம் ஒன்று, மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. விஷேட அதிரடிப்படையின் (STF) வாகனம் மோதி, மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவருடன் பயணித்த மற்றொரு இளைஞர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர், வவுனியாவைச் சேர்ந்த 32 வயதுடைய தமிழ் இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவத்தின் போது மோட்டார் சைக்கிளில் இருவரும் ஓமந்தை பகுதியில் பயணித்திருக்கிறார்கள். அந்த நேரத்தில், அதே வழியாக சென்ற விஷேட அதிரடிப்படையின் வாகனம் மோதி இந்த பரிதாபகரமான விபத்து ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்புப் படைகளின் வாகனங்களால் ஏற்படும் இவ்வகைச் சம்பவங்கள் கடந்த காலங்களிலும் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இச்சம்பவம் மீண்டும் தமிழர் வாழும் பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் பொறுப்புமிக்க நடவடிக்கைகள் பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் நடவடிக்கைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் தற்போதைய சூழ்நிலையில் தோன்றியுள்ளது.