உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
உப்பு பற்றாக்குறைக்கான காரணம் வெளியானது

இலங்கையில் தற்போதைய உப்பு பற்றாக்குறைக்கு உண்மையான காரணம், நுகர்வோரிடையே ஏற்படுத்தப்பட்ட தேவையற்ற அச்சமே என லங்கா உப்பு நிறுவனத்தின் தலைவர் டி. நந்தனதிலக தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “நாடுமுழுவதும் சந்தைகளில் உப்பு பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் ஒருவர் பத்து முதல் பன்னிரண்டு பக்கெட் வரை உப்பை வாங்கி சேமித்து வைத்துள்ளனர். சிலர் 5 முதல் 6 மாதங்களுக்கு போதுமான உப்பை சேமித்து வைத்திருப்பது எங்கள் கண்காணிப்பில் தெரியவந்துள்ளது. இதுவே சந்தையில் திடீர் தேவையை உருவாக்கி, உப்பு பற்றாக்குறையாக தோன்றும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.”
வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க இதேபோன்ற கருத்து ஒன்றை வெளியிடினார்.
அவர் தெரிவித்ததாவது, “ஒருவருக்கு ஒரு நாளைக்கு 5–7 கிராம் உப்பே தேவைப்படுகிறது. ஆனால் நாட்டில் உப்பு பற்றாக்குறை என்ற முற்றிலும் உண்மைதவறான தகவலால் மக்கள் அதிக அளவில் உப்பை கொள்வனவு செய்கின்றனர். நாட்டின் உற்பத்தி திறன் இது போன்ற தேவையை சந்திக்க முடியும்.”
தீர்வாக, அரசாங்கம் ஜூன் 10ஆம் திகதி வரை உப்பு இறக்குமதிக்கு அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து அமைச்சர் “திங்கள் மற்றும் புதன்கிழமைக்குள் போதுமான அளவு உப்பை இறக்குமதி செய்து சந்தையில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது அரசாங்கத்தின் தீர்மானமான நடவடிக்கையாகும், மேலும் அமைச்சரவையின் அங்கீகாரத்துடனும் முன்னெடுக்கப்படுகிறது” மேலும் தெரிவித்தார்.
சுமார் 15 வருடங்களுக்குப் பிறகு, கடந்த ஆண்டு டிசம்பரில் முதன்முறையாக உப்பு இறக்குமதி செய்யப்பட்டதையடுத்து, இது இரண்டாவது முறையாகும் எனவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.