உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
போர்வீரர் தின விழாவில் ஜனாதிபதி அனுர

இலங்கையில் நிலவிய உள்நாட்டுப் போர் முடிவடைந்து 16 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் நாளான மே 19ஆம் திகதி நடைபெறும் தேசிய போர்வீரர் தின விழாவில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பிரதம விருந்தினராக கலந்து கொள்வார் என ரணவிரு சேவா அதிகாரசபை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதிகாரசபையின் தலைவர் ஓய்வுபெற்ற பிரிகேடியர் செனரத் கோஹன இதனை உறுதிப்படுத்தியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, “இந்த நிகழ்வு ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறும் முக்கியமான தேசிய நிகழ்வாகும். நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர் அர்பணித்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஜனாதிபதி நேரில் வந்து மரியாதை செலுத்தவுள்ளார்” என்றார்.
நேற்று வெளியான அறிக்கையின்படி, ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டையில் உள்ள போர் வீரர்கள் நினைவுச்சின்னத்தில், இந்த விழா மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெறவுள்ளது.
முன்னதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடகவியலாளர் சந்திப்பில், ஜனாதிபதியின் சார்பாக பாதுகாப்பு துணை அமைச்சர் கலந்து கொள்வார் என கூறப்பட்டதால், ஜனாதிபதி பங்கேற்பு குறித்து குழப்பம் ஏற்பட்டது. இது பல தரப்பினரிடையே விமர்சனங்களுக்கும் வழிவகுத்தது.
எனினும், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது பங்கேற்பு திட்டத்தை ஏற்கனவே உறுதியாக உருவாக்கியிருந்தார் என்பதையும், விழாவிற்கு அவர் நேரில் வருவதை அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
2009ம் ஆண்டு மே மாதம், இலங்கையில் நீண்ட காலமாக இருந்த உள்நாட்டுப் போர் முடிவடைந்தது. அந்த போர் முடிவடைந்த நாளை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் மே 19 அன்று “தேசிய போர்வீரர் தினம்” அனுசரிக்கப்படுகிறது.
இந்நாள், போரில் உயிர் நீத்த இராணுவத்தினரும், காவல்துறையினரும் மற்றும் பாதுகாப்பு பிரிவினருக்கும் மரியாதை செலுத்தும் நாடாக விளங்குகிறது.