உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
வட மாகாண பிரதமச் செயலாளராக தனுஜா முருகேசன் நியமிப்பு
ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களால், வடக்கு மாகாண புதிய பிரதமச் செயலாளராக தனுஜா முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்திற்கான அதிகாரபூர்வ நியமனக் கடிதம், இன்று (20) பிற்பகல், ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க அவர்களால் தனுஜா முருகேசனுக்கு வழங்கப்பட்டது.
இந்த நியமனம் மூலம், வடமாகாண நிர்வாகத்திலும், மக்கள் சேவையிலும் அதிக செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடமாகாணத்தில் சமூக அபிவிருத்தி, பொது நிர்வாகம், புனர்வாழ்வு மற்றும் மக்களுக்கான அடிப்படை சேவைகள் தொடர்பான பணிகளில் தனுஜா முருகேசனின் அனுபவமும், அர்ப்பணிப்பும் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த புதிய நியமனம் வடமாகாணத்தின் நிர்வாகத்தில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.