உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு சிலை வைப்பதா? நாடாளுமன்றில் வெடித்த அமைச்சர்
விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுக்குச் சிலை அமைப்பது தொடர்பாக தாம் ஒருபோதும் கருத்து வெளியிடவில்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெளிவாகக் கூறியுள்ளார்.
நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய அமைச்சர் சந்திரசேகர், எதிர்க்கட்சியினரால் வதந்தி பரப்பப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். “பிரபாகரனுக்கு சிலை வைப்பது குறித்து நான் ஒருபோதும் கருத்து தெரிவித்ததில்லை. இது நாட்டில் நல்லுறவை சீர்குலைக்கும் வகையில், எதிர்க்கட்சியினர் முன்னெடுத்துள்ள பொய்யான பிரச்சாரம் மட்டுமே” என அவர் வலியுறுத்தினார்.
எதிர்க்கட்சித் தலைவர் ஹர்ஷன ராஜகருணா எம்.பி. உரையின்போது, அர்ச்சுனா எம்.பி.-யிடம் அமைச்சர் இந்த கருத்தை கூறியதாக சுட்டிக்காட்டியதையும் அமைச்சர் மறுத்தார்.“நான் எப்போதும் என் கட்சித் தலைவர் ரோஹண விஜேவீரவுடன் நெருக்கமாக இருந்தவன். அவருக்கே சிலை வைக்க வேண்டும் என்று கூட நான் எங்கும் கூறியதில்லை. அப்படி இருக்க, நான் வேறு ஒருவருக்குச் சிலை வைக்க வேண்டும் என கூறுவேனா?” என அவர் கேள்வி எழுப்பினார்.
இந்நாட்டில் போர் மற்றும் அரசியல் காரணங்களால் பலர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவருமே எமது சகோதரர்களாகவே கருதப்படவேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.“ஒரே ஒரு நபருக்காகக் கட்சி அல்லது இன அடிப்படையில் சிலை வைக்க முன்வருவதில்லை. நாட்டின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தும் வகையில் கருத்துகள் உருவாக்கப்படக்கூடாது,” என்றார் அவர்.
பொதுக்கூட்டங்களில், சட்டமன்றங்களில் பொறுப்புணர்வுடன் பேசப்பட வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது.சமூகநலனுக்காக உண்மையான தகவல்கள் மட்டுமே பகிரப்படும் சூழல் உருவாக வேண்டும் எனவும் அரசியல் விமர்சகர்கள் வலியுறுத்துகின்றனர்.