ஊரடங்குச் சட்டம் பற்றி வெளியான விசேட வர்த்தமாணி!
நாடளாவிய ரீதியில் இன்று (14) அதிகாலை 05 மணியளவில் இருந்து ஊரடங்குச்சட்டம் அமுலுக்குவரும் என பிரதமரும் பதில் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவினால் வர்த்தமாணி வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி இன்று அதிகாலை 05 மணியளவில் இருந்து ஊரடங்குச்சட்டம் நடைமுறைப்படுத்தபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நேற்று காலை மேல் மாகாணத்திற்கு ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்திய ரணில் விக்கிரமசிங்க நாடளாவிய ரீதியில் அவசரகாலச்சட்டத்தை பிரகடணப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.