எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த குடும்பஸ்த்தர்: பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்!
களுத்துறையில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் இன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
களுத்துறை – அளுத்கம பகுதியில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த குடும்பஸ்தர் மீது லொறி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அளுத்கம, தர்கா நகரைச் சேர்ந்த 53 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவர் நேற்றிரவு முதல் தர்கா நகர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து விட்டு, இன்று அதிகாலை மீண்டும் வீட்டுக்குச் செல்லத் தயாரானார். இதன்போது, மத்துகம நோக்கிப் பயணித்த லொறி மோதி அவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.