Saturday January 28, 2023
எமது தொண்டு நிறுவனம்
எம்மை தொடர்புகொள்ள
itamilnews itamilnews

Breaking News

இன்று நள்ளிரவு முதல் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

நாளை முதல் கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்!

itamilnews itamilnews
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
      • Ampara News
      • Anuradhapura News
      • Badulla News
      • Batticaloa News
      • Colombo News
      • Galle News
      • Gampaha News
      • Hambantota News
      • Jaffna News
      • Kalutara News
      • Kandy News
      • Kegalle News
      • Kilinochchi News
      • Kurunegala news
      • Mannar News
      • Matale News
      • Matara News
      • Moneragala News
      • Mullaitivu News
      • Nuwara Eliya news
      • Polonnaruwa News
      • Puttalam News
      • Ratnapura News
      • Trincomalee News
      • Vavuniya News
    • உலகச் செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • கனடா செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • அந்தரங்கம்
  • அரசியல்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • கலைகள்
  • சினிமா
  • அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
    • மரண அறிவித்தல்
  • எமது சேவைகள்
  • எம்மை தொடர்புகொள்ள
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • அரசியல்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • எமது சேவைகள்
    • கலைகள்
    • ஆரோக்கியம்
    • மரண அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
Braking news

எரிபொருள் விநியோகம் தொடர்பான அறிவிப்பு!

July 14, 2022 0 Comment
 எரிபொருள் விநியோகம் தொடர்பான அறிவிப்பு!

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக தேவையான எரிபொருளினை பெற்றுக்கொள்வதில் பெரும் சவாலினை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

எனினும் அத்தியாவசிய சேவையினை தடையின்றி வழங்குவதற்கும் பொதுமக்களின் வாழ்வாதார செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதற்கும் மக்களுக்கு குறைந்தளவிலான எரிபொருள் விநியோகமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

யாழ்.மாவட்டத்தில் இனிவரும் காலங்களில் ”வாகனம் ஒன்றிற்கு ஒரு எரிபொருள் விநியோக அட்டை” என்ற விகிதத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளது என யாழ். மாவட்ட செயலகம் ஊடக அறிக்கையொன்றை வெளியிடப்பட்டுள்ளது.

”இனிவரும் காலங்களில் எரிபொருள் அட்டைக்கே எரிபொருள் விநியோக்கப்பட இருப்பதனால் பொதுமக்கள் மற்றும் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோா் இவ் அட்டையினை விரைவாக பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்” எனவும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,

இவ்விடயம் தொடர்பில் பின்வரும் நடைமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம். பொதுமக்கள் மற்றும் ஓய்வூதியர்கள் தங்களுக்கான எரிபொருள் விநியோக அட்டையினை (வெள்ளை நிறம்) தாங்கள் வதியும் கிராமஉத்தியோகத்தரிடமும், அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர், தமது திணைக்களத் தலைவரினுடாகவும் (சுகாதார சேவை – பிங் நிறம், ஏனையோர் – நீல நிறம்) விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள முடியும். ”வாகனம் ஒன்றிக்கு ஒரு எரிபொருள் விநியோக அட்டை” எனும் அடிப்படையில் பதிவுகள் மேற்கொள்ளப்படும்.

வாகன உரிமை தொடர்பில் அது குடும்ப உறுப்பினர்களுக்கிடையே ( கணவன், மனைவி மற்றும் திருமணமாகாத பிள்ளைகள்) காணப்படின் குடும்ப உறுப்பினா் எவரேனும் ஒருவர் எரிபொருள் விநியோக அட்டைக்காக பதிவினை மேற்கொள்ள முடியும்.

வாகன உரிமை குடும்ப உறுப்பினர் அல்லாத எவரேனும் பெயரில் காணப்படின் முறையான ஆவணங்களை பிரதேச செயலகத்தில் சமர்ப்பித்து பதிவினை மேற்கொள்ள முடியும். நபர் ஒருவர் வாகனம் ஒன்றிக்கான எரிபொருள் விநியோக அட்டை பதிவினையே தனது பெயரில் மேற்கொள்ள முடியும்.

எனினும் வணிகம் அல்லது வாழ்வாதார நோக்கத்திற்காக பயன்படுத்தும் வாகனங்களுக்கு இந் நிபந்தனை பொருந்தாது. தங்களுக்கான எரிபொருள் நிரப்பு நிலையத்தினை தாங்களே தெரிவு செய்து கொள்ள முடியும்.

எனினும் ஏதேனும் நிலைமைகளில் எரிபொருள் கிடைக்கப்பெறும் நிலையங்களின் அடிப்படையில் தற்காலிகமாக வேறு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான அறிவுறுத்தல் உரிய தரப்பினரால் தங்களுக்கு வழங்கப்படும்.

மேற்படி அட்டைகளை பெற்றுக்கொள்வதில் ஏதேனும் இடர்பாடுகள் காணப்படுமாயின் உடனடியாக பிரதேச செயலங்களை நாடுமாறும் கேட்டுக்கொள்கிறோம் இனிவரும் காலங்களில் எரிபொருள் அட்டைக்கே எரிபொருள் விநியோகம் எனும் பங்கீட்டு முறைமை இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்பட இருப்பதனால் உடனடியாக எரிபொருள் விநியோக அட்டையினை விரைவாக பெற்றுக் கொள்ளுமாறு அனைவரும் அறிவுறுத்தப்படுகிறீர்கள்” என அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் சிறுபோக வேளான் அறுடை ஆரம்பித்துள்ள நிலையில் விவசாயிகள் விடுத்துள்ள வேண்டுகோளின் அடிப்படையில் நகர் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் மு.செல்வராசாவினால் 4000 லிட்டர் டீசல் விவசாயிகளுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து பொறுப்பான துறைசார் அதிகாரிகளால் தீர்மானிக்கப்பட்டதன் பின்னர் முன்னுரிமையடிப்படையில் வாழைச்சேனை கமநல கேந்திர நிலையம், கிரான் கமநல கேந்திர நிலையம் மற்றும் மண்டபத்தடி கமநல கேந்திர நிலையம் அடங்கலான மூன்று ஏபிசிகளில் 4 கண்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வருகின்ற நாட்களிலும் விவசாயிகளுக்கு டீசல் வழங்குவதற்கு தயாராக உள்ளதாக மட்டக்களப்பு நகரிலுள்ள ஐ.ஓ.சி உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நிலையத்தின் உரிமையாளர் ஏற்கனவே இரண்டு தடவைகளில் விவசாயிகளுக்கு முன்னுரிமையடிப்படையில் 3500 லீற்றர் டீசலினையும், 50 விவசாயிகளுக்கான பெட்ரோலினையும் வழங்கியிருந்தது்

நாடு முழுவதும் எரிபொருளை பெற்றுக்கொள்வதில் அனைத்து தரப்பினரும் பாரிய இடர்பாடுகளை எதிர்கொண்டு வருகின்ற நிலையில் மட்டக்களப்பு நகர் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையமானது தொடர்ச்சியாக ஒரு வார காலமாக நாளாந்தம் எரிபொருளை வழங்கிவருகின்றது.

இன்றைய தினம் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கும் இதன்போது எரிபொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous post
Next post
Related Stories for you

இன்று நள்ளிரவு முதல் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

January 28, 2023 0 min read

துயர செய்தி – திருமதி சரஸ்வதி அம்பாள் சிவபாதம்

January 28, 2023 1 min read

துயர செய்தி – திருமதி சரஸ்வதி விநாயகமூர்த்தி

January 28, 2023 1 min read
© 2022 to 2050 || All Right Reserved By itamilnews.com || Designed and Developed by 😍 WEBbuilders.lk
  • 0
    Facebook
  • 0
    Twitter
  • 0
    Linkedin
  • 0
    Facebook-messenger
  • 0
    Viber
  • 0
    Whatsapp
  • 0
    Telegram
  • 0
    Email