நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
காதலனுடன் நீர்வீழ்ச்சியைப் பார்வையிடச் சென்ற காதலியை அடித்துச் சென்ற நீர் !
காதலனுடன் கலபொட நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற யுவதி நீரில் அடித்துச்சென்ற சம்பவம் அப்பகுதயில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவமானது நேற்றையதினம் யாலேகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு காணாமல் போன சிறுமி குறித்த பகுதியையுடைய 17 வயதுடைய யுவதி என தெரியவந்துள்ளது.
நீர்வீழ்ச்சியை பார்வையிட்டபோது திடீரென நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தனது காதலி நீரில் அடித்துச்செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
நீரில் அடித்துச்செல்லப்பட்ட யுவதியை தேடும் பணியில் பொலிஸார் மற்றும் கடற்படையினர், பிரதேச வாசிகள் ஈடுபட்டுவருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.