போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
தனது காதல் கதையை மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியரால் பரபரப்பு!
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள மந்துவில் அரசரத்தினம் வித்தியாலத்தில் புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வந்த ஆசிரியரை இடம் மாற்றியதை கண்டித்தும், பிறிதொரு ஆசிரியர் மாணவர்களுக்கு தேவையில்லை எனவும் தெரிவித்து, பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் பாடசாலையினை மூடி இன்று காலை கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
பாடசாலையில் தற்போது கல்வி கற்பித்து வரும் குறித்த ஆசிரியர் மாணவர்களுக்கு அடிப்பது மற்றும் தனது காதல் கதையினை மாணவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதுமான செயற்பாடு, மாணவர்களை கல்வியில் இருந்து காதல் திசையில் இழுக்கும் செயற்பாடு எனவும் பெ
ற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இது குறித்து முல்லைத்தீவு வலயக்கல்வி அலுவலகத்திற்கும் முறைப்பாடு செய்துள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளார்கள்.
பிள்ளைகளுக்கு காதல் கதை சொல்லும் ஆசிரியர் பாடசாலைக்கு தேவை இல்லை என தெரிவித்த பெற்றோர்கள், ஒழுங்காக கல்வி கற்பித்த ஆசிரியருக்கு இடம்மாற்றம் வழங்கியதை இரத்துசெய்து அவரை மீண்டும் பாடசாலைக்கு அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தியும் கவனயீர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
இதனையடுத்து புதுக்குடியிருப்பு கோட்டக்கல்வி அலுவலகத்தினை சேர்ந்த அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பெற்றோர்களுடன் உரையாடியுள்ளார்.
அத்துடன் அடுத்த வாரத்தில் குறித்த ஆசிரியரை மீளவும் பாடசாலைக்கு பணிக்கு அமர்த்துவதாக அந்த அதிகாரி உறுதியளித்துள்ளதை தொடர்ந்து பெற்றோர்களால் போராட்டம் கைவிடப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.