பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
2021-2022 ஆம் கல்வியாண்டில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தகுதியான விண்ணப்பதாரர்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என ஆணைக்குழுவின் தலைவர் திரு.சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.