நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
பாணின் விலை மீண்டும் உயர்வு:அதிர்ச்சியில் மக்கள்!
இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. இதன்மூலம் புதிய விலையாக ரூ.190 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏனையபேக்கரி பொருட்களின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்படும்.
கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதற்கு கோதுமை மா நிறுவனங்கள் எடுத்த தீர்மானமே விலை அதிகரிப்புக்கு காரணம் என சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று நள்ளிரவு நிலவரப்படி கோதுமை மாவின் விலை 34 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக பேக்கரி உற்பத்திகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார்.