நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
பாதுகாப்பு படையினர் பொதுமக்களுக்கு விடுத்த வேண்டுகோள்!
யாழ்.மாவட்டத்தில் விநியோக நடவடிக்கைகளை சீரமைக்கும் பணிகளில் இராணுவம் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் நிலையில் பொதுமக்களுக்கு பாதகமான நடவடிக்கைகளில் யாரேனும் ஈடுபட்டால் அது குறித்து முறைப்பாடு வழங்குமாறு யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தலைமையகம் அறிவித்துள்ளது.
பொதுமக்கள் தம் முறைப்பாடுகளை வழங்குவதற்கான தொலைபேசி இலக்கம் ஒன்றையும் தலைமையகம் வழங்கியுள்ளது (0776344246) இந்த இலக்கத்துடன் தொடர்புகொண்டு முறைப்பாடுகளை வழங்கலாம்.
எரிபொருள் பதுக்கல், பாரபட்சம் மற்றும் ஊழல் செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்கள் தமது தகவல்களை குறித்த தொலைபேசி ஊடாக வழங்க முடியும்.
யாழ்.மாவட்டத்தில் அத்தியாவசிய சேவை வழங்குவதற்கான எரிபொருள் விநியோகத்தை இராணுவத்தின் கண்காணிப்பில் செயல்படுத்தி வரும் நிலையில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.