போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
பெண்ணொருவரால் நாடாளுமன்றத்தில் பரபரப்பு!
நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட சந்தேகத்திற்கிடமான பெண்ணொருவர் ஜயந்திபுர பிரதான பொலிஸ் நிலைய அதிகாரிகளால் இன்றைய தினம் (02-09-2022) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் எப்பாவல பிரதேசத்தில் வசிப்பவர். குறித்த பெண் ஏன் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்க முற்பட்டார் என்பது கேள்வியாக உள்ளதாகவும் அது தொடர்பில் தொடர்ந்தும் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த பெண் நேற்று (01-09-2022) காலை பீதியுடன் ஜெயந்திபுர பிரதான நுழைவாயிலுக்குள் நுழைய முயன்றார்.
இதன்போது, அங்கிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் அவரை உள்ளே நுழையவிடாமல் தடுத்ததையடுத்து, பெண் பொலிஸ் உத்தியோகத்தர் வரவழைக்கப்பட்டு, அப்பெண்ணை ஓரமாக அழைத்துச் சென்று கைது செய்தனர்.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக தலங்கம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.