போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
பொருளாதார நெருக்கடிக்கான முக்கிய காரணத்தை வெளியிட்ட மத்திய வங்கி ஆளுநர்
கடந்த ஏப்ரல் மாதம் (2022) கடனை திருப்பி செலுத்த முடியாத நாடாக உத்தியோகபூர்வமாக இலங்கை அறிவிக்கப்படுவதற்கு முன்னரே வங்குரோத்து நாடாக மாறியிருந்தது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க (Nandalal Weerasinghe) தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 2019 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பெரும் வரிக் குறைப்புகளும், கடன்களை தீர்ப்பதற்காக பணம் அச்சிடப்பட்டமையும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இலங்கை மத்திய வங்கியினால் அமுல்படுத்தப்படும் வேலைத்திட்டங்களை அடுத்த சில வருடங்களில் சரியாக நடைமுறைப்படுத்தாவிட்டால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் கடுமையான வீழ்ச்சியை சந்திக்கும் என நேற்று முந்தினம் (31-08-2022) நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போது மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டியிருந்தார்.