போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட கல்வி அமைச்சு!
நடப்பு ஆண்டு (2022) உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களில் 80% வருகைப் பதிவு கவனத்தில் கொள்ளப்படமாட்டாதென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பாடசாலை மாணவர்களுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதியில், 80% பாடசாலை நாட்களில் வருகைப் பதிவு செய்யப்பட வேண்டும் என கல்வி அமைச்சு சுற்றறிக்கை மூலம் தெரிவித்திருந்தது.
இருந்தபோதிலும் கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட கொரோனா, போக்குவரத்து சிரமம் மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக, டிசம்பர் 2022 இல் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் 80% வருகையை கருத்தில் கொள்ள வேண்டாம் என அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், 2019/2020 க.பொ.த உயர்தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான இறுதித் திகதி 2022.08.12 என கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.
இருப்பினும்,, அந்த கால எல்லை எதிர்வரும் 19ஆம் திகதி வரை நீடிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.