ரயில் பயணிகளுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!
ரயில் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதற்கும், முறைப்பாடு செய்வற்கும் ஏற்ற விதத்தில் 1971 என்ற அவசர சேவை தொலைப்பேசி இலக்கம் இன்று காலை 7 மணி முதல் 24 மணி நேரமும் இயங்கும் என ரயில் பொது முகாமையாளர் தம்மிக்க ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
இதனால் ரயில் புறப்படும் நேரம், ஆசனங்களை ஒதுக்குதல், ரயில் கட்டணம் தொடர்பான தகவல்கள், பாதுகாப்பு சேவை, ரயில் குறுக்கு பாதையில் இடம் பெரும் சிக்கல்கள் உள்ளிட்ட பல தகவல்களையும் குறைபாடுகளையும் இதன் மூலம் முன்வைக்க முடியும்.
மேலும் மும்மொழிகளிலும் சேவையை பெற்று கொள்ள முடியும் என தெரியவந்துள்ளது.