40 ஆயிரம் மெட்ரிக் தொன் பெட்ரோலுடன் நாட்டுக்கு வருகை தரும் கப்பல்!
நாட்டிற்கு தேவையான 40 ஆயிரம் மெட்ரிக் தொன் பெட்ரோலை சுமந்து இன்று இரவு கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை எரிசக்தி அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.
தேசிய எரிபொருள் பாஸ் QR திட்டம் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
மேலும் , எதிர்வரும் 24ஆம் திகதி வரை கொழும்பின் பல இடங்களிலும் QR குறியீடு பரிசோதனை செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.