உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
சாதனை வருமானத்தை ஈட்டிய அரசாங்க நிறுவனங்கள்!
வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள நிறுவனங்கள் இந்த ஆண்டு சாதனை வருமானத்தை ஈட்டியுள்ளன.
விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் அண்மையில் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் இந்த விடயம் தெரியவந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்த ஆண்டு சாதனை வருமானத்தை ஈட்டிய அரசாங்க நிறுவனங்கள்! | Government Companies Earned Income This Year
இதன்படி, வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் இந்த வருடம் 1,291 மில்லியன் ரூபாவையும், தேசிய விலங்கியல் திணைக்களம் 414 மில்லியன் ரூபாவையும் ஈட்டியுள்ளது.
வன பாதுகாப்பு திணைக்களம் 672 மில்லியன் ரூபாவையும் அரச மர கூட்டுத்தாபனம் 4,316 மில்லியன் ரூபாவையும் வருமானமாக ஈட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.