உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கும் சுதந்திர கட்சியின் முக்கியஸ்தர்கள்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள நாமல் ராஜபக்ஷவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குழு ஒன்று ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று (05-09-2024) கைச்சாத்திடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மொட்டுக் கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரசார செயலாளர் திசர குணசிங்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டடுள்ளனர்.
ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் பெருமளவான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.