உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய தகவல்!

நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவும் நோக்கில், நன்கொடைத் திட்டம் ஒன்றை, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளது.
சுகாதாரம், கல்வி மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றில், இலங்கையின் வெற்றிகள், தற்போதைய நெருக்கடியால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதென ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி (Hanaa Singer-Hamdy) , ட்விட்டர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், மருத்துவப் பொருட்களில் நிலவும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும், இலங்கைக்கு, அதன் நண்பர்கள் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் ஹனா சிங்கர் (Hanaa Singer-Hamdy) அழைப்பு விடுத்துள்ளார்.