உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
Photo Album: பார்ப்பதற்கு அப்படியே அப்பா போலவே இருக்கும் அமலாபால் மகன்- எப்படி இருக்காரு பாருங்க

நடிகை அமலாபால் அவருடைய மகனுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை அமலாபால்.
இவர் நடிப்பில் வெளியான வீரசேகரன், சிந்து சமவெளி ஆகிய படங்கள் சரியான ஒரு இடத்தை உருவாக்கி தராவிட்டாலும் அதன் பிறகு வெளியான “மைனா” திரைப்படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது.
இதனை தொடர்ந்து தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, வேலையில்லா பட்டதாரி, நிமிர்ந்து நில், பசங்க 2, அம்மா கணக்கு, திருட்டுப்பயலே 2, ராட்சசன், ஆடை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த வருடம் அமலாபால் அவருடைய காதலரை அறிமுகம் செய்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு இலாய் என்ற ஆண் குழந்தையும் இருக்கிறது.
அந்த வகையில், மகனுடன் சமீபத்தில் எடுத்து கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், “ மகன் லட்டு போல் இருக்காரு…” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.