உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
ஆபத்தான வினவிலங்குகள் உள்ள வனப்பகுதி… 5 நாட்களாக உயிர் பிழைத்த 8 வயது சிறுவன்!

சிங்கங்கள், யானைகள் என ஆபத்தான வனவிலங்குகள் அதிகம் உள்ள மட்டுசடோனா தேசிய பூங்கா வனப்பகுதியில் 8 வயதான சிறுவன் தனியாக சிக்கி 5 நாட்கள் உயிர் பிழைத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
டினோடெண்டா பூண்டு [Tinotenda என்று அந்த 8 வயது சிறுவன் கடந்த டிசம்பர் 27 ஆம் திகதி வடக்கு ஜிம்பாப்வேயில் உள்ள தனது கிராமத்திற்கு அருகே சுற்றித் திரிந்துகொண்டிருந்தபோது தொலைந்து போயுள்ளார்.
5 நாட்களுக்கு பிறகு சுமார் 30 மைல்கள் (50 கிமீ) தொலைவில் உள்ள வனப்பகுதியில் சிறுவன் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
நீரிழப்பினால் பலவீனமான நிலையில் சிறுவன் மீட்கப்பட்டார். வறட்சியின்போது தனது கிராமத்தில் கற்றுக்கொடுத்த யுக்திகளை பயன்படுத்தி சிறுவன் உயிர் பிழைத்துள்ளார்.
சிறுவன் ஒரு ஆற்றங்கரையில் குச்சிகளைப் பயன்படுத்தி தண்ணீரைத் தோண்டி, ட்ஸ்வான்ஸ்வா என்ற காட்டுப் பழத்தை உண்டு வாழ்ந்துள்ளார்.
சிறுவனின் கதையை விவரித்த உள்ளூர் எம்.பி. முட்சா முரோம்பெட்ஸி,
சிறுவன் அலைந்து திரிந்து, திசை தவறி, ஆபத்தான மட்டுசடோன்ஹா பூங்காவிற்குத் தெரியாமல் சென்றுள்ளார்.