உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
இன்று இடம்பெற்ற விபத்து; 13 பேர் வைத்தியசாலையில்

கொழும்பிலிருந்து – பசறை நோக்கிச் சென்ற தனியார் பேருந்து இன்று (11) காலை 6.30 மணியளவில் பசறையில் உள்ள 15வது தூண் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த 13 பேர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரையால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பேருந்து வீதியை விட்டு விலகி முன்பக்க பகுதி பள்ளத்தை நோக்கி வழுக்கிச் சென்று நின்றுள்ளது.