உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
யாழில் லொறியொன்றில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை ஆபத்தான பொருள்

சாவகச்சேரி சங்குபிட்டி பாலத்திற்கு அருகில், கூலர் ரக வாகனத்தில் கேரள கஞ்சா கடத்தல் முயற்சி பொலிசாரால் முறியடிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவைச் சேர்ந்த மூவர் சாவகச்சேரி பொலிஸாரால் கைது நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளனர்
96 கிலோ 310 கிராம் கேரள கஞ்சா 20 மில்லியன் ரூபாய் மதிப்பு கூலர் ரக வாகனத்தில் ஒளித்து வைத்திருந்தது.இரகசிய தகவலின் அடிப்படையில் சாவகச்சேரி பொலிசாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து திடீர் சோதனை நடத்தினர்.சாவகச்சேரி பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர்கள் முற்படுத்தப்பட உள்ளனர்.போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடக்கின்றன.
இந்த சம்பவம் யாழ்ப்பாணம் மற்றும் வட மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதை காட்டுகிறது.