உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
யாழில் இளைஞன் ஒருவரால் மூதாட்டிக்கு நேர்ந்த பயங்கரம்

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் களவுக்கு சென்ற இளைஞன் தாக்கியதில் 69 வயதுடைய மூதாட்டி ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் ஏப்ரல் 20ஆம் தேதி காலை இடம்பெற்றுள்ளது. இரு வயோதிப பெண்கள் குறித்த வீட்டில் வசித்து வந்தனர். அவர்களில் ஒருவர் ஈஸ்டர் ஆராதனைக்காக தேவாலயத்திற்குச் சென்றிருந்தார்.
இந்நிலையில் இருவரும் தேவாலயத்திற்கு சென்றிருப்பார்கள் என எண்ணிய 20 வயதுடைய அயல்வீட்டு இளைஞன் திருடுவதற்காக அந்த வீட்டுக்குள் சென்றுள்ளார். அப்போது வீடு புகுந்த இளைஞனை காணும் போது, அவர் 69 வயதுடைய மூதாட்டியை கொட்டன் ஒன்றினால் தாக்கி கொலை செய்துள்ளார்.
தேவாலயத்திலிருந்து வீடு திரும்பிய மற்றைய மூதாட்டி சம்பவத்தை கவனித்து அயலவர்களுக்கு தகவல் வழங்கியதோடு, பின்னர் பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சடலம் பருத்தித்துறை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், தடயவியல் பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த இளைஞனை கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.