உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
ரகசிய கேமரா; யாழில் குளித்துக்கொண்டிருந்த யுவதிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கோண்டாவில் உள்ள தனியார் தங்குமிடத்தில் தங்கியிருந்த யுவதியொருவர் குளித்துக் கொண்டிருந்தபோது, அவரது வீடியோவை ரகசியமாக எடுத்த குற்றச்சாட்டில் தங்குமிட நிர்வாகி ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிமாவட்டத்திலிருந்து வந்த குடும்பம் ஒன்று, மே 18 ஞாயிற்றுக்கிழமை அன்று கோண்டாவில் உள்ள தனியார் தங்குமிடத்தில் தங்கியிருந்தனர். அந்தக் குடும்பத்தில் சேர்ந்த யுவதியொருவர் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த வேளையில், தங்குமிட நிர்வாகி ஒருவர் குளியலறையின் மேற்பகுதியில் உள்ள ஒளிமூடிய துவாரம் மூலம் தனது செல்போனைப் பயன்படுத்தி வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தை உணர்ந்த யுவதி, உடனே தனது குடும்பத்தினரிடம் புகாரளித்துள்ளார். பின்னர் அவர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர்.
பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, குறித்த தங்குமிட நிர்வாகியை கைது செய்ததுடன், அவரது செல்போன்கள் மற்றும் மின்வெளிச்சாடல்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து, தொழில்நுட்ப பகுப்பாய்வுக்காக அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் விசாரணைகளில், கடந்த வருடங்களில் யாழ் நகரில் உள்ள பிரபல விடுதியில் பணியாற்றிய காலத்தில், இரகசிய கமரா வழியாக பெண்களின் தனியுரிமையை மீறிய சம்பவத்தில் இவர் தொடர்புடையதாக இருந்தமை தெரியவந்துள்ளது.
இச்சம்பவம், பெண்களின் பாதுகாப்பு தொடர்பில் பல்வேறு குழப்பங்களையும், சிக்கல்களையும் ஏற்படுத்தியிருக்கின்றது. குற்றவாளிக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.