உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
யாழ் வைத்தியசாலையில் பல மாதம் கோமாவில் இருந்த அரச அதிகாரி; இறுதியில் நேர்ந்த சோகம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 6 மாதங்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த மடு – கற்கிரந்தகுளம் பகுதியைச் சேர்ந்த பிரதேச செயலர் ஒருவர் நேற்று (31) உயிரிழந்தார்.
6 மாதங்களுக்கு முன்பு, அநுராதபுரம் வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது நடந்து சென்ற ஒருவரை மோதியுள்ளார்.நடந்து சென்ற நபர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், பிரதேச செயலர் பலத்த காயமடைந்து கோமா நிலைக்கு சென்றார்.
அநுராதபுரம் வைத்தியசாலையில் 2 மாதங்கள் சிகிச்சை. பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றம்.4 மாதங்கள் கோமா நிலையில் சிகிச்சை.சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
இந்த சம்பவம் அரச அலுவலர்களின் பாதுகாப்பு மற்றும் வழி பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மீண்டும் ஒரு கவனமீர்ப்பு ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக இத்தகைய சம்பவங்களில் விபத்து காரணங்கள், மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாடு, சாலை விதிகள் போன்றவை ஆய்வு செய்யப்படும்.