உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
கொத்மலை பஸ் விபத்து ; ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்த விடயம்

இறம்பொடை – கெரண்டி எல்ல பகுதியில், கடந்த சனிக்கிழமை நடந்த பேருந்து விபத்தில் உயிரிழந்த 22 பேரின் உறவினர்களுக்கு உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த விபத்துடன் தொடர்புடைய பேருந்தில் இயந்திரக் குறைபாடுகள் எதுவும் காணப்படவில்லை என்று நுவரெலியா மாவட்ட பிரதான மோட்டார் வாகன பரிசோதகர் ஜாலிய பண்டார தெரிவித்தார்.
சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு, சாரதி ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக எந்த சாட்சியமும் காணப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
இந்த விபத்து தொடர்பாக, மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, விரிவான அறிக்கைகள் மோட்டார் வாகன ஆணையாளர் நாயகம் வழியாக அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
உயிரிழந்தவர்கள் 17 முதல் 79 வயதினரிடையிலானவர்கள். காயமடைந்த 43 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகிறார்கள், அதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.